மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 
கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 




கோவை;-நவ-18 மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகின்ற (27.11.2022) அன்று பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்   பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம்   முன்னிலையில் மாவட்ட ஆட்சியர்  ஜி.எஸ்.சமீரன்  தலைமையில்,  நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகின்ற (27.11.2022) அன்று பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம்   முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில்,  நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மு.கோகிலா, திட்ட இயக்குநர் மகளிர்திட்டம் செல்வம், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) கமலகண்ணன், வேலைவாய்ப்புத்துறை இணை இயக்குநர் ஞானசேகரன், துணை இயக்குநர் கருணாகரன்,  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சத்யா  உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்ததாவது,
கோவை மாவட்டத்தில் வேலைவாய்ப்புத்துறை சார்பில் இரண்டு  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள்  நடத்தப்பட்டுள்ளது. இதில் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 2201 நபர்களும், ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 1832 நபர்களும்  வேலைவாய்ப்பு  பெற்றனர். 
மேலும், தற்போது, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகின்ற (27.11.2022) அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் தொழில் , வணிக நிறுவனங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள்  உள்ளிட்ட 200க்கு மேற்பட்ட வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர். 
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது குறித்து அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும்,  துண்டு பிரசுங்கள் விநியோகம்,ஆட்டோக்களில் ஒலிபெருக்கி  மூலம் விளம்பரப்படுத்துதல், மற்றும் பேருந்துகளில்  வாயிலாகவும்  இம்முகாம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கல்லூரிகளில் என்எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவர்களை ஈடுபடுத்தி பங்குபெறும் வேலைநாடுநர்களுக்கு மற்றும் வேலையளிப்பவர்களுக்கு உதவி மையம் அமைக்கவேண்டும்.  இம்முகாமில் வேலைநாடுநர்கள் கலந்துகொள்ள ஏதுவாக முகாம்  நடைபெறும் நாளன்று ஊராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் வால்பாறையில் உள்ளிட்ட இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கவேண்டும். இம்முகாம் நடைபெறும் நாளில் தீயணைப்பு வாகனம், 108 அவசர ஊர்தி, தேவையான மருத்துவக் குழு, ஆகியவை தயார் நிலையில் இருக்கவேண்டும். தடையின்றி மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் நல விடுதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும்  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் நல விடுதிகளில் தங்கி பயிலும் கல்லூரி மாணவர்கள், பழங்குடியினர், திருநங்கைகள், நலிவடைந்த பிரிவினர்,  மாற்றுத்திறனாளிகள்,  மற்றும் இதர பயனாளிகளை  இவ் வேலைவாய்ப்பில் முகாமில் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். மற்ற மாவட்டங்களில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை விட சிறப்பாக கோவை மாவட்டத்தில் இம்முகாமை நடத்திட தேவையான நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்களும்   ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்  ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.

               பத்திரிக்கையாளர்  ஜீவா

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்