மக்கள் வெளிச்சம் நாளிதழ்
யானைகள் மோதல் பெண் யானை சாவு
வால்பாறை;-நவ-17 ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வன கோட்டம், வால்பாறை வனச்சரகம், காடம்பாறை பிரிவு, பூனாச்சி சுற்று, அப்பர் ஆழியாறு சரக காடம்பாறை பிரிவு பகுதியில் வனப்பணியாளர்கள் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்களால் ரோந்துப் பணி மேற்கொண்டு முகாமிற்கு திரும்பிக்
கொண்டிருந்த போது அப்பர் ஆழியாறு பள்ளம் என்ற பகுதியில் பெண் காட்டு யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் பார்கவ தேஜா உத்தரவின் படி, இறந்த பெண் காட்டு யானையினை பிரேத பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வே.செல்வம் உதவி வனப் பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர், அட்டகட்டி பயிற்சி மையம் ஆ.மணிகண்டன் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர், இயற்கை ஆர்வலர்கள் முன்னிலையில் சுகுமார் வனக்கால்நடை மருத்துவ அலுவலர், விஜய ராகவன் ஆனைமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் மற்றும் கோவிந்தராஜ் வால்பாறை உதவி கால்நடை மருத்துவர் ஆகியோரால் இறந்த பெண் காட்டு யானையின் உடலினை உடற்கூராய்வு செய்யப்பட்டது. உடற்கூராய்வின் போது இறந்த யானைக்கு சுமார் 45 முதல் 50 வயது இருக்கும் எனவும், ஆண் காட்டு யானையோடு சண்டையிட்டு, ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டதன் காரணமாக பெண் காட்டு யானை இறந்துள்ளதாக பிரேதப் பரிசோதனை முடிவில் கால்நடை மருத்துவ குழுவினரால் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இறந்த பெண் காட்டு யானையினை குழி தோண்டி புதைக்கப் பட்டது
Comments
Post a Comment