மக்கள் வெளிச்சம் நாளிதழ்

ஆனைமலை பகுதியில் 2- டன் குட்கா பறிமுதல் 5 பேர் கைது

டி.எஸ்.பி கீர்த்திவாசன் அதிரடி


 

பொள்ளாச்சி;-அக்-18 ஆனைமலை  பகுதியில் சுமார் 2 டன் எடை கொண்ட  குட்கா பொருட்கள் பறிமுதல்
 விற்பனைக்கு கடத்தி சென்றவர்கள் கைது
இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருள்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பத்ரிநாராயணன்,இ.கா.ப. முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில்  இன்று (17.10.2022) ஆனைமலை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  வால்பாறை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன்  தலைமையில் காவல்துறையினர் பொள்ளாச்சி மீனாட்சிபுரம்  ரோடு பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்ட போது அவ்வழியாக குட்கா பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவரது மகன்களான அஜய் சதீஷ்(22), சத்யா (21),  செல்லையா என்பவரது மகன் செந்தில் (43) திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் அருள்குமார் (36), ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் விக்னேஷ்(21) ஆகிய 5 நபர்களையும் கைது செய்து அவர்கள் விற்பனைக்கு  கடத்திச் சென்ற *சுமார் ரூ.10,00,000/- மதிப்புள்ள  2 டன்  எடை கொண்ட குட்கா பொருட்கள், ரூ.16,200/- பணம் மற்றும் நான்கு சக்கர வாகனம்-2 ஆகியவற்றை பறிமுதல்  செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
போதை பொருட்கள் இளைஞர்களின் சிந்தனையை அழித்து அவர்களின் வளர்ச்சியை தடுத்து விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு போதை பொருள் விற்பனையாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்
இது போன்ற போதை பொருள் விற்பனையாளர்கள் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
                  

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்