மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை மாவட்ட வருவாய் அளவில் மேட்டுப்பாளையம், அன்னூர், கோவை வடக்கு, சூலூர், மதுக்கரை, பேரூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் காலியாக உள்ளது கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பணிக்காக வேலைவாய்ப்பகம் பரிந்துரைக்கும் நபர்கள் தவிர அந்தந்த வட்ட எல்லைக்குள் வசிக்கும் நபர்களும் விண்ணப்பிக்கலாம் என சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்கள் வாயிலாக 10-10-2022 அன்று நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
மேற்படி கிராம உதவியாளர் பணிக்கு இணையதளம் (online) வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களான http://www.tn.gov.in மற்றும் http://cra.tn.gov.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக மட்டுமே 07-11-2022 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 10-10-2022 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நாள் முதல் நாளது தேதி வரை தபால் மூலமாகவோ, நேரடியாகவோ விண்ணப்பம் செய்துள்ள விண்ணப்பதாரர்களும், மேலே குறிப்பிட்ட இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணையதள வாயிலாக விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment