மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை;-அக்-11 இனிப்பு காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றவேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தல்.
உணவு வணிகர்கள் உணவு பொருள் தயாரிப்பு அளவை பொறுத்து (உணவு வகை எண். 18-Indian Sweets and Indian Snacks & Savouries Products)-ன் கீழ் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும்.
உணவு வணிகர்கள் தங்களது உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு சான்றிதழை காட்டுப்படுத்தி வைக்கப்பட வேண்டும்.
உணவுப் பொருட்களை நுகர்வோர் அல்லாத பிற வணிகர்களுக்கு விற்பனை செய்யும் போது அவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பதிவு சான்று பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
உணவு பாதுகாப்பு உரிமம் பதிவு சான்றிதழ் பெறாமல் உணவு தயாரிப்பதோ, விற்பதோ உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 பிரிவு 31-ன் கீழ் சட்டப்படி குற்றமாகும்.
தயாரிப்பு பகுதி சமையலறையில் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும், தயாரிப்பு பகுதி இருட்டாகவும் சுவர்களில் கரி படிந்திருக்கக் கூடாது.
சமையலறையில் போதுமான உறிஞ்சும் அமைப்புடன் கூடிய புகை போக்கி மற்றும் முறையான கழிவு நீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்த வேண்டும். புகை போக்கியின் உயரம் குறைவாகவும், கழிவு நீர் வடிகால் சிதலமடைந்த நிலையில் இருக்க கூடாது.
உணவு பொருள் தயாரிப்பு வளாகத்தினுள் ஈக்கள், பூச்சிகள் புகாத வகையில் தடையமைப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு முறைகள் செயல்படுத்த வேண்டும்.
உணவு தயாரிப்புக்கு பொட்டலமிடப்பட்ட எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உணவு தயாரிப்பின் போது சமையல் எண்ணெய் அதிகபட்சமாக ஒருமுறை மட்டுமே சூடாக்கப்பட வேண்டும். சூடேற்றப்பட்ட எண்ணெயில் மேலும் புதிய எண்ணெய் சேர்த்து மீண்டும் மீண்டும் சூடேற்றி சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது.
இனிப்பு கார வகைகள் தயாரிப்பில் இயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படலாம். அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் 100ppm (100mg/kg) அளவில் சேர்க்கலாம்.
அனுமதிக்கப்படாத நிறமூட்டிகள் சேர்க்கக் கூடாது. மேலும் அனுமதிக்கப்ப்ட்ட வண்ணங்கள் 100ppm அளவை மீறக்கூடாது.
உணவு தயாரிப்பிற்க்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட (ஆய்வு -IS10500) மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
உணவுப் பொருள் தயாரிப்பு விற்பனைக்கான பாத்திரங்கள் இருப்பு கலன்கள் உபயோகப்படுத்தும் போன்ற உபகரணங்களை தூய்மையாக கழுவு நன்றாக உலர்த்தப்பட்டிருக்க வேண்டும்.
உணவு சமைக்கும்/ கையாளும் பணியாளர்கள் தன்சுத்தம் பராமரிக்க வேண்டும். பணியாளர்கள் கைகளில் நகங்களுடன், முழுச்சீருமையற்ற வகையில் எளிதில் கழன்று விழக்கூடிய நகைகள் மோதிரங்களுடன் பணியாற்றக் கூடாது.
பணியின் போது பணியாளர்கள் கையுறை தலையுறை மேலங்கி அணிந்திருக்க வேண்டும். வெற்றிலை புகையிலை மெல்லுதல், புகைபிடித்தல், எச்சில் துப்புதல் போன்ற செயல்பாடுகள் உணவு தயாரிப்பு வளாகத்தினுள் எப்பகுதியிலும் அனுமதிக்கக் கூடாது.
உணவு கையாளுபவர்கள் அனைவரும் மருத்துவ தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும். தொற்று நோயால் பாதிக்க்பபட்ட பணியாளர்கள் எவரையும் உணவு தயாரிப்பு வளாகத்தினுள் அனுமதிக்கக் கூடாது.
உணவு மூலப் பொருட்கள் சேமிப்பு அறையில் போதிய வெளிச்சத்துடனும், ஈரப்பதம் மாறாத வகையில் பலகையின் மீது போதிய உயரத்தில் மூடிய நிலையில் வகைப்பட வேண்டும்.
உணவுப் பொருட்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்கள் தனித்தனியே வைக்க வேண்டும்.
பேக்கிங் செய்யப்படும் உணவுப் பொட்டலங்கள் மீது உணவுப் பொருளின் விபரங்கள் அச்சிடப்;பட வேண்டும். விபரச்சீட்டு எளிதில் அழிய கூடிய வகையிலோ, கிழியக் கூடிய வகையிலோ, மேலும் ஸ்டிக்கர் வடிவிலோ விபரச்சீட்டு அமைக்கக் கூடாது.
சில்லரை வகையில் விற்பனை செய்யப்படும் இனிப்பு காரம் போன்ற உணவு பொருட்களின் தயாரிப்பு காலாவதி விபரங்கள் காட்சிப்படுத்த வேண்டும்.
பால் பொருட்களில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களும், பால் அல்லாத பொருட்களில் தயாரிக்கப்படும்; உணவு பொருட்களும் சேர்த்து பொட்டலமிட்டு விற்பனை செய்யக் கூடாது. சிறப்பு பொட்டலங்களின் (Gift Sweet Box) மீதும் விபரச்சீட்டு இருக்க வேண்டும்.
விபரச்சீட்டில் உள்ள விபரங்கள் தெளிவாக படிக்கும் வகையில் அச்சிடப்பட வேண்டும். எழுத்துக்கள் எண்கள் மீது படும் வகையில் (Overlapping) அச்சிடக் கூடாது.
உணவுப் பொருட்கள் எண்ணெய் பலகாரங்கள் பரிமாறும் போது இலை அல்லது தட்டுகள் பயன்படுத்த வேண்டும்.
உணவுப் பொருட்கள் அச்சிடப்பட்ட தாள்கள் செய்தித் தாள்கள் வைத்து பரிமாறவோ, தடைசெயயபட்ட நெகிழி பைகளிலோ விற்பனை செய்யக் கூடாது.
உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி பெற்ற மேற்பார்வையாளர் (Food Safety Training
and Certification – FoSTaC) இருக்க வேண்டும்.
உணவுப் பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட இடுபொருட்கள் துணை பொருட்களை வாங்கியதற்கான ரசீதுகள் பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.
உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வுக்கு வரும் போது தயாரிப்பு விற்பனை நிறுவனத்தில் ஆய்வுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் பொறுப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
தங்கள் பகுதியில் உணவுப் பாதுகாப்பு சட்டத்திற்கு புறம்பாக உணவு தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு சான்று பெற்றுக் கொள்ளலாமல் உணவு வணிகம் செய்வோர் பற்றிய தகவல்களை உணவுப் பாதுகாப்பு அலுவலருக்கு தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிவிக்கும் நபர் விபரங்கள் ரகசியம் காக்கப்படும்.
மேலும் பொது மக்கள் உணவு சம்மந்தமாக 9444042322 என்ற WhatsApp எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment