மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை மாவட்டத்தில்  ஒழுங்கு சட்டம் பிரச்சினை பயப்படத் தேவையில்லை

மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவிப்பு

 
கோவை;-செப்-25 கோவை மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் சட்ட மற்றும் ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, காவல் துறையுடன் இணைந்து  சட்டம் மற்றும் ஒழுங்கினை கண்காணிக்கவும், பாதிப்புகள் ஏதும் ஏற்படாதவண்ணம்  அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த  இரண்டு நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேற்படி சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து உரிய விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

     மேலும், மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் , மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஜமாத் அமைப்புக்கள் மற்றும்  இந்து அமைப்புகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். மேற்படி அமைப்புகளிடம் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கினை பேணிக்காக்க ஒத்துழைப்பு அளிக்க கோரப்பட்டது. 

      23.09.2022 அன்று முதல் அதிவிரைவுப்படை (RAF) கம்பெனிகள் மற்றும் சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படையினர் காவல்துறையுடன் இணைந்து  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வருவாய் துறையினை சேர்ந்த அலுவலர்கள் நிர்வாக நடுவர்களாக நியமனம் செய்யப்பட்டு சட்டம் மற்றும் ஒழுங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

     நகர்ப்புற பகுதிகளில் காவலர்களுடன்  வார்டு வாரியாக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் கிராம வாரியாக கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் பொருட்டும், உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

     கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் தொடர்பாக பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை
எனவும், பொதுமக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் மேற்படி நிகழ்வுகள் குறித்தும், சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தங்கள் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழும் வண்ணம் இருந்தாலோ, சந்தேகிக்கப்பட கூடிய நடவடிக்கைகளில் ஏதேனும் நபர்கள் ஈடுபட்டாலோ உடனடியாக மாவட்ட காவல்  துறை கட்டுபாட்டு அறைக்கு (100/422-2300970,. WhatsApp 8190000100/0422-2300600 WhatsApp 9498101165) தகவல் தெரிவிக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்