மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை ஆனைமலை பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்,சமீரன் திடீர் ஆய்வு
கோவை;-செப்-22 கோவை மாவட்டம் ஆனைமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை ஊராட்சிஒன்றிய, துவக்கப்பள்ளி, சத்துணவு கூடம், வேளாண்மை விற்பனை வணிக வளாகம், உழவர் உற்பத்தியாளர் நிறுவன காய்கறி விற்பனை நிலையம், பழங்குடியின மகளிர் சுய உதவிக்குழுவின் தையல் கடை மற்றும் உணவகம், ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளி மாணவ மாணவியர்களிடம் கலந்துரையாடினார். மேலும், மதிய உணவு தயாரிக்கும் சத்துணவுக்கூடத்தில் உணவு சுத்தமாகவும், சுகாதாரமாகவும், தரமானதாகவும் சமைக்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
ஆனைமலை வேளாண் விற்பனை வணிக வளாகத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்ட விவரங்களை கேட்டறிந்ததுடன், முறையாக அவற்றை பாதுகாக்க விற்பனை நிலைய அலுவலருக்கு அறிவுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவன காய்கறி விற்பனை நிலையம், பழங்குடியின மகளிர் சுய உதவிக்குழுவினரால் நடத்தப்படும் தையல் கடை மற்றும் உணவகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன், உணவகத்தில் உணவு சமைப்பதற்கும் , பரிமாறுவதற்கும் பயன்படும் தட்டு, டம்ளர், தண்ணீர் குவளை, உள்ளிட்ட அனைத்து பாத்திரங்களும், மண்பாத்திரங்களில் செய்யப்பட்டு உணவு பரிமாறுவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் உணவகம் நடத்தி வரும் மகளிர் சுய உதவிக்குழுவினரை பாராட்டினார்.
பத்திரிக்கையாளர் ஜீவா
Comments
Post a Comment