மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம்

கோவை;-செப்-17 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக அரசு தடுப்பூசி மையங்களில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்க அனுமதிக்கப்படுகிறார்கள் முன்னெச்சரிக்கை  (பூஸ்ட்டர்)   தடுப்பூசி  எடுத்துக்  கொண்ட  பிறகு,  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.  
தமிழகஅரசு உத்தரவின்  படி,  செப்டம்பர் மாதம் (30.09.2022) இறுதி   வரையில்  மட்டுமே  தினம்தோறும்  மற்றும்  முகாம்களிலும்  இலவசமாக முன்னெச்சரிக்கை தடுப்பூசி வழங்கப்படும். அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் 37 வது கோவிட்-19 தடுப்பூசி  முகாம்  வருகின்ற  ஞாயிற்றுக்கிழமை 18.09.2022 அன்று நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 1530 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைத்து தடுப்பூசி வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் கிராமப்புறங்களில் 1081 முகாம்களும் மாநகராட்சிப்பகுதிகளில் 340 முகாம்களும் நகராட்சிப்பகுதிகளில் 109 முகாம்களும் நடத்திட  திட்டமிடப்பட்டுள்ளது. 
முன்னெச்சரிக்கை (பூஸ்ட்டர்) தடுப்பூசியானது 15.07.2022 முதல்  75  நாட்களுக்கு 18 வயதிற்கு  மேற்பட்ட  அனைவருக்கும் இலவசமாக  அரசு  தடுப்பூசி  மையங்களில்  வழங்கப்பட்டு  வருகிறது. இந்த  முன்னெச்சரிக்கை (பூஸ்ட்டர்)   தடுப்பூசியானது 30.09.2022 வரை மட்டுமே 18-59 வயதினருக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை உடனடியாக பயன்படுத்திக்கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
கோவை மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 29,16,812 நபர்களுக்கும், முதல்  தவணையும் 26,83,800, நபர்களுக்கும் இரண்டாம் தவணையும்,  15-18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு 1,42,264  முதல்  தவணையும்,  1,15,233 இரண்டாம் தவணையும் , 12-14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு 90,666 முதல்  தவணையும்,   66729 இரண்டாம்தவணையும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில்  82,061 பேருக்கும் , 19-59 மேற்பட்டவர்களில் 1,67,099 பேருக்கும் முன்னெச்சரிக்கை (பூஸ்ட்டர் ) தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது . 
இந்த பூஸ்ட்டர் தடுப்பூசியானது இரண்டாம் தவணைப்பெற்று 6 மாதங்கள் அல்லது 26 வாரம் முடிவுற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது இந்த பூஸ்ட்டர் தடுப்பூசியானது  செப்டம்பர்  மாத இறுதி வரை மட்டுமே 18-59 வயதினருக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
18.09.2022 அன்று நடைபெறும் இந்த முகாமில் ஒரு நபர் கூட விடுபடாமல் கிராமங்களிலும் ,பேரூராட்சிகளிலும் ,நகராட்சி,,மாநகராட்சிகளில் மக்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இந்த முகாம் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முதன்மை கல்வி அலுவலர்கள், தனியார் பயிற்சி நிலைய செவிலியர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடைபெற உள்ளது பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி பெற்று கொரோனா  தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.. முகாம் நடைபெறும் இடங்களை பொதுமக்கள் மாவட்ட இணையதளம் coimbatore.nic.in வாயிலாக அறிந்து கொள்ளலாம்.என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்