மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவையில் தமிழக முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின்
முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
கோவை;-ஆக-24 கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் முடிவுற்ற திட்டப் பணிகளை
திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,
பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.8.2022) கோயம்புத்தூர், ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.271.25 கோடி செலவில் 228 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.662.50 கோடி மதிப்பீட்டிலான 748 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,07,410 பயனாளிகளுக்கு ரூ.589.24 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு சென்னையிலிருந்து புறப்பட்டு கோயம்புத்தூர் சென்றடைந்தார். இன்று காலை கோயம்புத்தூர், ஈச்சனாரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ள செல்லும் வழியில், முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிர்மலா மகளிர் கல்லூரி மாணவியர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு அவர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார்.
நாளை (25.8.2022) காலை திருப்பூரில் நடைபெறவுள்ள குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ மாநாட்டில் கலந்து கொண்டு தொழில்முனைவோர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். பின்னர் நாளை மறுநாள் (26.8.2022) ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.
இன்றைய தினம் கோயம்புத்தூரில் நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இம்மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் விவரங்கள்:
பொதுப்பணித் துறை (மருத்துவப் பணிகள்) சார்பில் ரூ.100.03 கோடி செலவில் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மேம்படுத்தப்பட்ட சீமாங் சென்டர் கட்டடம், மண்டல புற்றுநோய் மையத்தில் அதிநவீன சிகிச்சை கருவிகள் நிறுவியது, மதுபோதை மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு மையம் மற்றும் பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆர்டிபிசிஆர் கருவிகள் நிறுவியது;
கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.57.05 கோடி செலவில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடம், நகர நலவாழ்வு மையங்கள், சிறுவர் விளையாட்டுப் பூங்கா, குடிநீர் விநியோகத் திட்டம், உள்ளிட்ட 18 வளர்ச்சி திட்டப் பணிகள்;
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சார்பில் ரூ.24.33 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின்நிலையங்கள் மற்றும் கூடுதல் மின்மாற்றிகள்;
பேரூராட்சிகள் பகுதிகளில் ரூ.22.44 கோடி செலவில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், பெருமாள் கோவில்பதி பகுதியில் பாலம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், சமுதாய நலக்கூடம், தார் சாலைகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளிட்ட 33 வளர்ச்சி திட்டப் பணிகள்;
பொதுப்பணித் துறையில் (நீர்வள ஆதார அமைப்பு) ரூ.17.81 கோடி செலவில் பரம்பிக்குளம் ஆழியார் வடிநிலத்தில் ஆச்சிப்பட்டி ஓடை, கோதவாடி ஓடை, சூலக்கல் ஆறு, வரட்டாறு ஆகியவற்றில் தடுப்பணைகள் மற்றும் புனரமைக்கப்பட்ட பரம்பிக்குளம் பிரதானக் கால்வாய் ஆகிய முடிவுற்ற 5 பணிகள் மற்றும் பொதுப்பணித் துறை (கட்டடம் மற்றும் பராமரிப்பு) ரூ.11.38 கோடி செலவில் கால்நடை மருந்தகங்கள், அரசுப் பள்ளிகளில் கணினி, கலை மற்றும் ஓவிய அறைகள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம், கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம் உள்ளிட்ட 10 பணிகள்;
நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.2.59 கோடி செலவில் கணபதி – அத்திப்பாளையம் சாலையில் உயர்மட்டப் பாலம்;
உயர்கல்வித் துறை சார்பில் ரூ.11.48 கோடி செலவில் பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் மற்றும் வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள், நூலகம், கருத்தரங்கக்கூடம்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.20.73 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம், சுயஉதவிக் குழுக் கட்டடங்கள், அங்கன்வாடி மையக் கட்டடங்கள், தானியக் கிடங்கு, சாலைகள் அமைத்தல், ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்கள் உள்ளிட்ட 138 பணிகள்;
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.2.73 கோடி செலவில் துணை வேளாண்மை விரிவாக்க மையம், புதிய தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சிக் கட்டடம் மற்றும் மறுசீரமைப்பு செய்யப்பட்ட குறிச்சி உழவர் சந்தை;
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில்
ரூ.33 இலட்சம் செலவில் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கக் கட்டடம், நகரும் நியாய விலைக்கடை உள்ளிட்ட 4 பணிகள்;
இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ரூ.35 இலட்சம் செலவிலான 3 பணிகள்;
என மொத்தம் ரூ.271.25 கோடி செலவில் 228 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
மேலும், இவ்விழாவில் முதலமைச்சர் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் விவரங்கள்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் துணை மின் நிலையங்கள் அமைத்தல், துணை மின் நிலையங்களில் உள்ள மின் மாற்றிகளின் திறனை உயர்த்துதல் மற்றும் 22 மின்பாதைகளை பிரித்தல், மின் அழுத்த விநியோக அமைப்பினை நிறுவுதல், இரட்டை மின் மாற்றிகளை பிரித்தல் என ரூ.237.13 கோடி மதிப்பீட்டிலான 9 பணிகள்;
கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.134.08 கோடி மதிப்பீட்டிலான சூரிய மின்சக்தி நிலையம், கூடுதல் வகுப்பறைகள், சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் விநியோகப் பணிகள், ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகள், பூங்கா மேம்பாட்டுப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் உள்ளிட்ட 334 புதிய திட்டப் பணிகள்;
நீர்வளத்துறை சார்பில் ரூ.121.62 கோடி மதிப்பீட்டில் வால்பாறை சோலையார் அணையை பலப்படுத்தும் பணி, கால்வாய் புனரமைக்கும் பணிகள், நடைபாலம் அமைக்கும் பணிகள், தடுப்பணை கட்டும் பணிகள் உள்ளிட்ட 10 பணிகள்;
மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலத்துறை சார்பில் ஆழியார் மற்றும் கோட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் பழுதடைந்த 429 வீடுகள் ரூ.21.46 கோடி செலவில் புதிதாக கட்டும் பணி;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பாலம் கட்டுதல், பள்ளிகளில் உட்கட்டமைப்பு, நீர்தேக்கத்தொட்டி, சாலைகள் அமைத்தல், பலப்படுத்துதல், நீர்நிலைகள் புனரமைத்தல் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் என ரூ.74.96 கோடி மதிப்பீட்டிலான 119 புதிய திட்டப் பணிகள்;
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.9.85 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம், நகராட்சி அலுவலகக் கூடுதல் கட்டடம், தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட 5 புதிய திட்டப் பணிகள்;
பேரூராட்சிகள் துறை சார்பில் ரூ.23.08 கோடி மதிப்பீட்டில் சூலூர் வாரச்சந்தை மேம்பாட்டுப் பணிகள், துப்புரவுப் பணியாளர் குடியிருப்பு, தார்சாலை மற்றும் வடிகால் அமைத்தல், பூங்கா மேம்பாடு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்ட 253 புதிய திட்டப் பணிகள்;
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.22.43 கோடி மதிப்பீட்டில் காந்தையாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் மற்றும் அவினாசி-திருப்பூர்- பல்லடம்-பொள்ளாச்சி-கொச்சின் (வழி) மீன்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகள்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடங்கள்;
பொதுப்பணித் துறை (கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு) மற்றும் பொதுப்பணித் துறை (மருத்துவப் பணிகள்) சார்பில் ரூ.8.93 கோடி மதிப்பீட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை மற்றும் ஆய்வகம், கால்நடை மருந்தகக் கட்டடம், வ.உ. சிதம்பரனார் அவர்களுக்கு முழுஉருவச் சிலை, சிங்காரவேலர் இல்லத்தில் கூடுதல் கட்டடம், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையக் கூடுதல் கட்டடம்;
கூட்டுறவுத் துறை சார்பில் ரூ.31 இலட்சம் மதிப்பீட்டிலான துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தின் தலைமை அலுவலகக் கட்டடம் நவீனப்படுத்தும் பணிகள்;
என மொத்தம் ரூ.662.50 கோடி மதிப்பீட்டிலான 748 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.
இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் விவரங்கள்:
1902 மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில ரூ.161.32 கோடி கல்விக் கடன், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக செயல்பட்டு வரும் சமவாய்ப்பு மையம் வாயிலாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு, பழங்குடியின மக்களுக்கு தனிநபர் வன அனுபவ நில உரிமைச்சான்று, “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரிகள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேல்நிலை கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.10.53 கோடி மதிப்பீட்டில் இலவச மிதிவண்டிகள், மகளிர் திட்டம் மூலம் பயனாளிகளுக்கு கடனுதவிகள், கூட்டுறவுத் துறையின் மூலம் 5411 பயனாளிகளுக்கு ரூ.25.93 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் 10,737 நபர்களுக்கு ரூ.176.03 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள், என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.589.24 கோடி மதிப்பில் 1,07,410 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.
முன்னதாக, கோயம்புத்தூர், ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர்
.மு.பெ. சாமிநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் திருமதி. என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர். நடராஜன், அந்தியூர் செல்வராஜ், கு.சண்முகசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் இ.ஆர். ஈஸ்வரன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மு. பிரதாப், கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் ஆர். வெற்றிசெல்வன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment