கோவை ஈச்சனாரியில் முதல்வர் மு.க,ஸ்டாலின் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார் 


புதிய திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார்

 கோவை;-ஆக-23 கோவை மாவட்டம், ஈச்சனாரியில் 24.08.2022 அன்று  நடைபெறவுள்ள அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவுற்ற திட்டப் பணிகளை  திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,  பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 24.08.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், ஈச்சனாரியில் நடைபெறவுள்ள அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். 
முடிவுற்ற திட்டப் பணிகள் – பொதுப்பணித்துறை,  கோயம்புத்தூர்  மாநகராட்சி,  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, நீர்வளத் துறை,  உயர்கல்வித் துறை, பொதுப்பணித்துறை(கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு), நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை ,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை  முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார். 
அடிக்கல் நாட்டும் திட்டப் பணிகள் -  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், கோயம்புத்தூர்  மாநகராட்சி, நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, பேரூராட்சிகள், நெடுஞ்சாலைத்துறை, நகராட்சிகளின் நிருவாகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்    நலத்துறை(தாட்கோ- பொறியியல் துறை),  பொதுப்பணித்துறை(கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு), பொதுப்பணித்துறை(மருத்துவப்பணிகள்) கூட்டுறவுத் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை  ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு  முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
அரசு நலத்திட்ட உதவிகள் – மருத்துவம் –மக்கள் நல்வாழ்வுத்துறை,  மாவட்ட முன்னோடி வங்கி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை,  கூட்டுறவுத்துறை, கோயம்புத்தூர் மாநகராட்சி, பள்ளிக் கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொழில்  வணிகத் துறை (மாவட்ட தொழில் மையம்), தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, பேரூராட்சிகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும்  முதலமைச்சர்  வழங்கவுள்ளார்
இவ்விழாவில், அமைச்சர்கள்  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்