மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை வஉசி மைதானத்தில் சுதந்திர தினவிழா
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கோவை;-ஆக-13 சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில் வருகின்ற திங்கட்கிழமை (15.08.2022) நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் காலை 9:05 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள உள்ளார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், காவல் துறையில் சிறப்பாக பணி புரிந்த காவலர்களுக்கு பக்கங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்க உள்ளார்.
பின்னர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. பங்கு கொண்ட அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி. எஸ். சமீரன் பரிசுகளும் வழங்க உள்ளார்கள். எனவே நமது மாவட்டத்தைச் சேர்ந்த தேசபற்றாளர்கள், பொது மக்கள் என அனைவரும் திரளாக பங்கு கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Comments
Post a Comment