மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை மாவட்டத்தில் 33-வது கோவிட்-19 சிறப்பு தடுப்பூசி முகாம் ( 07-08-2022)
கோவை;-ஆக-06 இந்திய சுதந்திரத்தின் 75- வது விழாவைக் கொண்டாடும் விதத்தில் 15/08/2022 முதல் 75 நாட்களுக்கு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தடுப்பூசி இலவசமாக அரசு தடுப்பூசி மையங்களில் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தடுப்பூசி யானது இரண்டாம் தவணை பெற்று 6 மாதங்கள் 26 வாரம் ஆன 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக அரசு தடுப்பூசி மையங்களில் வழங்கப்படுகிறது.
33-வது கோவிட்-19 தடுப்பூசி முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை 07/08/2022 அன்று தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் 1530 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைத்து தடுப்பூசி வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் கிராமப்புறங்களில் 1081 முகாம்களும், மாநகராட்சிப் பகுதிகளில் 340 முகாம்களும், மாநகராட்சிப் பகுதிகளில் 109 முகாம்களும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை உடனடியாக பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கோவை மாவட்டத்தில் 05/08/2022 வரை முதல் தவணை 32,31698 பேருக்கும், இரண்டாம் தவணை 27,44,762 பேருக்கும், முன்னெச்சரிக்கை தடுப்பூசி 1,84,524 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
தகுதியான நபர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தங்களை சார்ந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆவண செய்ய வேண்டும். நமது மாவட்டத்தில் உள்ள அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா இல்லாத கோவையை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
Comments
Post a Comment