மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், திருநம்பிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்

  மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 
 


 
கோவை மாவட்டம் நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்காக சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் ஆலோசனை முகாம் வரும் ஜூலை 12ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் நேர்காணல்கள் நிகழ்த்தி தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யவுள்ளனர்.

முகாம் நடைபெறும் நாள் - 12 ஜூலை 2022

இடம் - கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

நேரம் - காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

கல்வித் தகுதி - 8th, 10th, 12th, Degree

வயது வரம்பு - 18 முதல் 40 வரை மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மற்றும் திருநம்பிகளுக்கு மட்டும்.

     முன்பதிவு அவசியம். முகாமில் கலந்துகொள்வதற்கும், மேலும் விபரங்களுக்கும் 8925513701, 8925513717, 8925801463 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும். பங்குபெறும் நபர்களுக்கு சுய தொழில் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்