மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை மாவட்டத்தில்  31 வது கோவிட் சிறப்பு தடுப்பூசி முகாம் 
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

 
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று  அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்திலும் அதன் தாக்கம் துவங்கியுள்ளது. நான்காம் அலை கொரோனா நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இந்த நான்காம் அலை தொற்றியிருந்தது நம்மை பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிட் 19 தடுப்பூசி பெற்றுக்கொள்வது அவசியம். எனவே பொது மக்களை இந்த நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு  தமிழக முதல்வரின்  அறிவுத்தலின் படி 12 முதல் 14 வயது வரை 15 முதல் 18 வயது வரை உள்ள இளம் சிறார்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஞாயிற்றுக்கிழமை 10.07.2022 தடுப்பூசி வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

     கோவிட் 19 சிறப்பு தடுப்பூசி முகாம் (10-7-2022) ஞாயிற்றுக்கிழமை காலை தமிழகம் முழுவதும் 1,00,000 இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் 3509 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைத்து தடுப்பூசி வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் கிராமப் புறங்களில் 2304 முகாம்களும் மாநகராட்சிப் பகுதியில் 950 முகாம்களும் நகராட்சி பகுதிகளில் 225 முகாம்களும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 

     கோவை மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 2869347 நபர்களுக்கும் 260043 இரண்டாம் தவணணயும் 15-18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு 138206 முதல் தவணை 106496 இரண்டாம் தவணணயும், 12-14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு 83151 முதல் தவணை 54689 இரண்டாம் தவணணயும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 97200 பேருக்கு முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியானது இரண்டாம் தவணை பெற்று ஒன்பது மாதங்களாக சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், மேலும் 60 வயதிற்கு மேற்பட்டு இரண்டாம் தவணைப் பெற்று ஒன்பது மாதங்கள் கழிந்தவர்களுக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படுகிறது. 

     ஒரு நபர் கூட விடாமல் கிராமங்களிலும், பேரூராட்சிகளிலும், நகராட்சி, மாநகராட்சிகளில் மக்களுக்கு இந்த தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முதன்மை கல்வி அலுவலர்கள், தனியார் பயிற்சி நிலைய செவிலியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடைபெற உள்ளது. 
 ஞாயிற்றுக்கிழமை (10-7-2022) நடைபெறும் இந்த முகாமில் இதுவரை முதல் தவணை பெற்றுக்கொள்ளாதவர்கள் முதல் தவணை பெற்று இரண்டாம் தவணை பெற்றுக் கொள்ளாத வர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத வர்கள் தவறாமல் தடுப்பூசி பெற்று இந்த நான்காம் அலை கொரோனா தொற்றிலிருந்து  பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. முகாம் நடைபெறும் இடங்களை பொது மக்கள் மாவட்ட இணையதளம் coimbatore.nic.in வழியாக அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்