மக்கள் வெளிச்சம் நாளிதழ்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு
3352 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
கோவை;-ஜூலை-19 தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு - 2022 க்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் 3552 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இத்தேர்விற்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான அறிமுக வகுப்பு வரும் புதன்கிழமை 20.07.2022 அன்று மதியம் 3:00 மணியளவில் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் TNUSRB தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பப் படிவம் மற்றும் தங்களது புகைப்படத்துடன் (Photo) இந்த அறிமுக வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பிற்கு தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் பின்வருமாறு
துறை - காவல் துறை, பதவி - இரண்டாம் நிலைக் காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை), பொது ஆண்கள் - 1,526, பெண்கள் - 654, மொத்தம் - 2,180
இரண்டாம் நிலைக் காவலர் ( தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), பொது ஆண்கள் - 1,091, மொத்தம் - 1,091.
துறை - சிறை மற்றும் சீர்திருத்த துறை, பதவி - இரண்டாம் நிலை சிறைக் காவலர், பொது ஆண்கள் - 153, பெண்கள் - 8, மொத்தம் - 161.
துறை - தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, பதவி - தீயணைப்பாளர், பொது ஆண்கள் - 120 ,மொத்தம் - 120.
மொத்த காலியிடங்கள் (ஆண்கள்) -2,890
பெண்கள் - 662.
மொத்தம் - 3,552.
தகுதி வரம்பு: கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் 10ஆம் வகுப்பு/SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் அதற்கு மேல் கல்வித் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
வயது வரம்பு: ஜூலை 1, 2022 தேதியின் படி விண்ணப்பதாரர் 18 முதல் 26 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை : இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ஜூலை 7-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை TNUSRB - யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnusrb.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும். இத்தேர்விற்கான பாடக்குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறையின் tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்வையிட்டு தேவைப்படும் தகவல்களை திரட்டி தேர்விற்கு தயார் செய்து கொள்ளலாம். போட்டித் தேர்வு எழுதி அரசு வேலைவாய்ப்பு பெற விரும்புவோர் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments
Post a Comment