மக்கள் வெளிச்சம் நாளிதழ்
வால்பாறை கருமலை எஸ்டேட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
வால்பாறை கருமலை எஸ்டேட் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தில் அடாத மழையிலும் பெண்கள் பணிபுரியும் தேயிலை எஸ்டேட் பகுதியில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றியும் மற்றும் விடியல் காவலன்.எஸ்.ஒ.எஸ். செயலி. Sak. செயலி மற்றும்181/.1098. விளக்கத்தைப் பற்றியும் சைபர். Carime. பற்றியும் விரிவாக எடுத்துரைத்து பெண்களும் பெண் குழந்தைகளும் ஆபத்தான நேரங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என விரிவாக அவர்களுக்கு புரியும் விதமாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் போலீசார் மற்றும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் தொடர்ந்து வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் காவல் ஆய்வாளர் கற்பகம் விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறார்
Comments
Post a Comment