மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை உறுதி திட்டத்தில் பணி


கோவை;-ஜூன்-10 ஊரக வளர்ச்சி துறையில் கடந்த 08-11-2011 அன்று மக்கள் நலப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் பணி நீக்கம் செய்யப்பட்ட முந்தைய மக்கள் நலப் பணியாளர்களை தற்போது அரசு மகாத்மா காந்தி தேசிய வேலைஉறுதி திட்டத்தில் வேலை உறுதி திட்டப் பணி ஒருங்கிணைப்பாளராக பணியில் ஈடுபட வாய்ப்பு அளித்துள்ளது இப்பணிக்கென மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட நிதியிலிருந்து ரூ.5000/ம் கூடுதலாக கிராம ஊராட்சி பணிகளுக்காக ரூ.2500/ம் ஆக மொத்தம் ரூ.7500/ மாதம் ஒன்றுக்கு ஒட்டு மொத்த தொகுப்பூதியம் வழங்கப்படும் 
    எனவே 08-11-2011 அன்று பணியிழந்த இப்பணியில் ஈடுபட விருப்பம் உள்ள முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் தாங்கள் ஏற்கெனவே பணிபுரிந்த வாட்டாரத்தின் வாட்டார வளர்ச்சி அலுவலரை(கிராம ஊராட்சி) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது மேலும் இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம்(கிராம ஊராட்சி) ஏற்கனவே பணியாற்றிய விபரத்துடன் பணியில் ஈடுபடவுள்ளதற்கான விருப்ப கடிதத்தினையும் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர்/வட்டார வளர்ச்சி அலுவலரிடம் 13-06-2022 முதல் 18-06-2022- க்குள் வழங்கலாம் அவ்வாறு பணியில் ஈடுபட விருப்பம் தெரிவிப்பவர்களது விருப்பக் கடிதம் பரிசீலிக்கப்பட்டு 01-07-2022 முதல் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் எனவே 08-11-2011 அன்று பணிநீக்கம் செய்யப்பட்ட முந்தைய மக்கள் நலப் பணியாளர்கள் இப்பணி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள 13-06-2022 முதல் 18-06-2022 க்குள் தவறாமல் தங்களது விருப்பத்தினை தெரிவிக்குமாறும் அத்தகைய விருப்ப விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணியில் ஈடுபடபரிசிலிக்கப்பட உள்ளதால் குறிப்பிட்ட காலத்திற்குள் விருப்பம் தெரிவிக்கவும். காலம் கடந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்க இயலாது என்பதால் குறித்த காலத்தில் விண்ணப்பித்து இப்பணி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்