மக்கள் வெளிச்சம் நாளிதழ்
உதவி ஆய்வாளர் தேர்வெழுத இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு ....
கோவை:-ஜூன்-25தமிழகத்தில் காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அந்த வகையில் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு இரண்டு நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலம் 444 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது.
அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு கோவை பொள்ளாச்சி சாலையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிலையில் தேர்வு எழுதுவதற்கு இளைஞர்கள் திரளாக ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment