மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கரடி தாக்கி வடமாநில இளைஞர் படுகாயம்



வால்பாறை;-ஜூன்-08 ஆனைமலை புலிகள் காப்பகம் வனக்கோட்டம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட தனியார் காடுகள் தோட்டம் தி.வ.வுட் பிரையர்ஸ் குரூப் செங்குத்துப்பாறை எஸ்டேட்டில் வசித்து வரும் (ஜார்கண்ட் மாநிலம்) வடமாநில தொழிலாளர் ஈடோ ஓரான் என்பவரது மகன் புத்வாஓரான் மாணிக்கா எஸ்டேட் கள.எண் 36 தேயிலை தோட்டப் பகுதியில் இன்று  பணி மேற்கொண்டிருந்த போது 8;50 மணியளவில் எதிர்பாராத விதமாக கரடி தாக்கியது இதில் இவரது கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக மேற்படி எஸ்டேட் ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குநர் இராமசுப்பிரமணியம், துணை கள இயக்குநர் எம்.ஜி.கணேசன், ஆகியோரின் உத்தரவின் படி வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ், மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் நேரில் சென்று பழங்கள் வழங்கி நிவாரணமாக 5000ருபாய் வழங்கினர். இதனை தொடர்ந்து மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் தலைமையில் சம்பவ இடத்தை தணிக்கைக்கு உட்படுத்தினர். கரடியின் நடவடிக்கை குறித்து வனவர் சிவக்குமார் தலைமையில் தனிக்குழுக்கள் அமைத்து கரடி நடமாட்டம் குறித்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்