மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் 

அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்  



கோவை;-ஜூன்-10 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மனித உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் மின்சார துறை,  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வழங்கினார். மேலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் தாமாகவே வீடு கட்டும் திட்த்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை பயனாளிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்,மற்றும் அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணையையும் வழங்கினார் நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் எம்.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்