மக்கள் வெளிச்சம் நாளிதழ்
வால்பாறை ஆற்றில் மூழ்கி சுற்றுலா பயணி பலி
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள ஜெயஸ்ரீ எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் மன்சூர்(38) இவர் கேரளா மாநிலம் தலச்சேரி இடையபள்ளி. பகுதியைச் சேர்ந்தவர் வால்பாறை பகுதிக்கு குடும்பத்துடன் சுற்றுலா பயணம் வந்துள்ளார் ஆற்றில் குளிக்கச் சென்ற போது சுழலில் சிக்கி பரிதாபமாக உயிர் இறந்துள்ளார் உடனே இப்பகுதி மக்கள் வால்பாறை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தினார்கள் உடனே காவல் ஆய்வாளர் கற்பகம் மற்றும். எஸ் .ஐ தங்கராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வனத்துறை தீயணைப்பு துறையினரின் உதவியுடன் இறந்தவரின் உடலை தேடி எடுத்தனர் பின்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு வைத்தனர் இதனால் அப்பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மிக வருத்தத்துடன் திரும்பிச் சென்றதால் அப்பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment