மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை பாப்பம்பட்டி பிரிவில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் 


கோவை;-ஜூன்-26 கோவை வடக்கு மாவட்டம் சூலூர் சட்டமன்ற காங்கிரஸ் கமிட்டி பள்ளபாளையம் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் பாப்பம்பட்டி பிரிவு பேருந்து நிலையம் முன்புறம் நடைபெற்றது     மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்காண்டு ஒப்பந்த அடிப்படையிலான ராணுவ வீரர்கள் ஆள்சேர்ப்பு திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் V.M.C மனோகரன் வட்டார காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராயல் மணி பள்ளபாளையம் நகர காங்கிரஸ்கமிட்டி தலைவர் முகேஷ்  தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் ஜே.பி. ஜெகநாதன் மாவட்ட துணைத்தலைவர் வெங்கடபதி மாவட்ட செயலாளர் ரங்கசாமி, சௌந்தரராஜன் பீடம்பள்ளி செல்வராஜ் வட்டார தலைவர்கள் சிவக்குமார் ,ராமசாமி மாவட்ட நிர்வாகி தண்டபாணி இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தேசியசெயலாளர் நவீன்குமார் வட்டார செயலாளர் சூலூர் பீட்டர் துரை  சூலூர் .14.வது வாரடு பேரூராட்சி உறுப்பினர் மணிமேகலை சூலூர் கண்ணன் உட்பட மாநில மாவட்ட நகர கிராம காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
                    நிருபர் சூலூர் சேகர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்