மக்கள் வெளிச்சம் நாளிதழ்
உலக சுற்றுச்சூழல் தினம்.
பொள்ளாச்சி பட்டாம்பூச்சி தமிழ்க்களம் சார்பில் மரக்கன்று நடுவிழா....
பொள்ளாச்சி:-ஜூன்-05
உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி பட்டாம்பூச்சி தமிழ் களம் சார்பில் மாணவர்களால் மரக்கன்று நடப்பட்டது.
நிகழ்வில் பொள்ளாச்சி நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு தொடங்கி வைத்து மாணவர்களிடம் சுற்றுச்சுழல் விழிப்புணர்வு குறித்து பேசினார்.
இதில் பட்டாம்பூச்சி தமிழ்க்கள ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் முன்னிலை வகித்தார். நேதாஜி இளைஞர் பேரவை செயலாளர் மணிகண்டன் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டார்.
முடிவில் பட்டாம்பூச்சி குழும தீபா முருகானந்தம் நன்றி கூறினார்.
Comments
Post a Comment