மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவையில் உலக சிக்கன தினத்தை முன்னிட்டு பரிசுகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
கோவை;-ஜூன்-27 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக சிக்கன தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை போட்டி, கவிதை போட்டி, சொற்றொடர் போட்டி, பேச்சு போட்டி, ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 12 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் சிறுசேமிப்பு துறையில் 2020-2021 ஆண்டில் அதிக தொகை வசூல் செய்வதில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய நிலை முகவர்கள் மகளிர் முகவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000/- க்கான சேமிப்பு பத்திரம் மற்றும் கேடயம், இரண்டாம் பரிசாக ரூ.2000/- க்கான சேமிப்பு பத்திரம், மூன்றாம் பரிசாக ரூ,1000-க்கான சேமிப்பு பத்திரங்களையும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அளவில் சிறந்து விளங்கிய மகளிர் முகவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1000- க்கான சேமிப்பு பத்திரங்கள் என மொத்தம் 24 முகவர்களுக்கு பரிசுத் தொகையை தேசிய சேமிப்பு பத்திரமாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார் மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர் அதில் இலவச வீடு வேண்டி 46 மனுக்களும், வீட்டுமனைப் பட்டா வேண்டி105 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 10 மனுக்களும், 182 இதர மனுக்கள் என மொத்தம் 342 கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறு சேமிப்பு) எஸ்.உமாமகேஸ்வரி. தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராம்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமாரி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment