மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை சூலூர் கருமத்தம்பட்டி சாலையில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு
  அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 


 கோவை மாவட்டம் சூலூர் தாலூகா கருமத்தம்பட்டி சோமனூர் சாலை குறிஞ்சி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகில் செல்கின்ற வீரப்ப கவுண்டர் சாலை
தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்ற பாதையாகும்
 இவ்வழியே பள்ளி மாணவர்கள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள்,
என பலரும் சென்று வருகின்ற வீரப்ப கவுண்டர் சாலையில் புதிதாக மதுக்கடை அமைப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது இங்கு மதுக்கடை வந்தால் தினசரி ஏராளமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும் விபத்துகள் நடைபெறும்,
இந்தப் பாதையில் செல்லும் பொதுமக்கள் பெண்கள் பள்ளி மாணவிகள் மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவரும் தினசரி பயந்து கொண்டே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்
ஆகவே இந்த பகுதியில் கட்டாயம் மதுக்கடை வரக்கூடாது அமைக்கக் கூடாது என 
அனைத்துக் கட்சி சார்பிலும் மற்றும் இந்தப் பகுதி ஊர் பொது மக்கள் சார்பிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர்  வி கணேசமூர்த்தி  தலைமையில்
கோவை புறநகர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்  .வி எம் சி மனோகரன் 
ஆஇ அதிமுக சார்பில் நகராட்சி செயலாளர் ஆதவன் பிரகாஷ் அவர்கள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  .பி எஸ் ராமசாமி 
பாரதிய ஜனதா கட்சி சார்பில்
மாவட்ட மகளிரணி தலைவர்  ஏ ரேவதி  ஆகியோர் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தப் பகுதியில் கண்டிப்பாக மதுக்கடை அமைக்க கூடாது என வந்திருந்த பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் கோஷம் எழுப்பினார்கள்
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ஆர் பி முருகேசன்  கிட்டாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வி எம் சி சந்திரசேகர்  நகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவர் பாலசுப்பிரமணியம்
வட்டாரத் தலைவர் கராத்தே ராமசாமி
சூலூர் தெற்கு வட்டார தலைவர் மணிகண்டன் ரங்கசாமி தீரன் கந்தசாமி துரை மணி ஏழாவது வார்டு கவுன்சிலர் பாலாமணி சின்னமணி ஊர் கவுண்டர் நடராஜன் வடிவேல் செண்ணியப்ப கவுண்டர் கே கே எச் சி மருத்துவமனை டாக்டர் கார்த்தி ரமேஷ் N R  ஸ்டுடியோ கேபிள் ராஜேந்திரன் கே கே மகாலிங்கம்
பாரதிய ஜனதா கட்சி கவிதா பத்மநாபன் தர்மலிங்கம்
விளம்பரம் ராமசாமி மேஸ்திரி செல்வம் பொன்மகள்கணேஷ் பொன்னுச்சாமி செல்வம் அந்தோணி சிவகுமார் சக்திவேல் ரமணி
மற்றும் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள அனைத்து கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களும் ஊர் பொதுமக்களும் அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு இந்த பகுதியில் மதுக்கடை வரக்கூடாது என கோஷம் எழுப்பினார்கள்
                      நிருபர் சூலூர் சேகர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்