மக்கள் வெளிச்சம் நாளிதழ்
தேசிய அளவில் "Eat Right challege" போட்டியில் தேசிய அளவில் முதலிடத்தில் தமிழகம் 12 வது இடத்தில் கோவை மாவட்டம்
உலக உணவு பாதுகாப்பு தினத்தை (07-06-2022) முன்னிட்டு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் புது டில்லியில் நடந்த விழாவில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் 4-வது மாநில உணவுப் பாதுகாப்பு குறியீடு 2021-2022 ம் ஆண்டுக்கான தர வரிசைப் பட்டியலில் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடம் பெற்று அதற்கான விருதை மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையர் பெற்றார்.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் சார்பில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் கோவை மாவட்டம் 12 ம் இடம் தமிழக அளவில் 4-வது இடத்தையும் கோவை மாவட்டம் பெற்றதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்ட நியமன அலுவலர் மரு.தமிழ்செல்வனை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மேலும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரனமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த தேசிய அளவிலான போட்டியில் உணவு வணிக நிறுவனங்களின் உரிமம் பெறுதல், தொடர் கண்காணிப்பு, உணவு மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்தல், விதிமுறைகள் பின்பற்றுதல், உணவு வணிகர்களுக்கான பயிற்சி வழங்குதல், என பல்வேறு குறியீடுகளின் அடிப்படையில் சிறந்து விளங்கும் நகரங்களுக்கு தேசிய அளவில் பரிசுகள் அறிவிக்கப்பட்டது தேசிய அளவில் 150 நகரங்கள்/ மாவட்டங்கள் பங்கேற்று அதில் 75 நகரங்கள்/மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலில் தேசிய அளவில் முதலிடத்தில் தமிழ்நாடு 12 வது இடத்திலும் தமிழக அளவில் 4- வது இடத்தில் கோவை மாவட்டம் பெற்று சிறப்பு சேர்த்துள்ளது இதனையடுத்து கடந்த 14-06-2002 அன்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கோவை மாவட்ட நியமன அலுவலர் மரு.தமிழ்செல்வனை நேரில் பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார் மேலும் தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நியமன அலுவலர்களுக்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அனைவருக்கும் நேரில் பாராட்டு தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துக்கள் பெற்றனர். நிகழ்ச்சியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சுப்புராஜ், கோவிந்தராஜ், கோவிந்தராஜன், செல்வபாண்டியன், வேலுச்சாமி, ஆறுச்சாமி, ஆதிகோபால கிருஷ்ணன், மகராஜன், ராமசாமி, சொழல்வள்ளன், சிவானந்தம், மோகன்தாஸ், முருகேசன், காமராஜ், நரசிம்மன், பாலசுப்பிரமணி, செந்தில்குமார், ராமச்சந்திரன், சண்முகம், காளிமுத்து மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment