மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கொப்பரை கொள்முதலை அதிகரிக்க கூடுதலாக இரண்டு கொள்முதல் நிலையங்கள் 


கோவை;-ஜூன்-02 விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் கொப்பரை கொள்முதலை அதிகரிக்க 02-6-2022 முதல் தொண்டாமுத்தூர், அன்னூர் ஆகிய 2 நிறுவனங்களை புதியதாக கொள்முதல் நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன் பெறும் வகையில் மத்திய அரசின் நாபெட் நிறுவனத்தின் மூலம் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஒழுங்குறை விற்பனை கூடங்கள் வாயிலாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது 
 தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக நிர்ணயிக்கப்பட்ட தரம்,அளவு கொண்ட அரவைத் தேங்காய் கொப்பரை கிலோ ரூ.105.90  க்கும் பந்து தேங்காய் கொப்பரை கிலோ ரூ.110.00  க்கும் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துள்ளது 
 கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரி, ஆனைமலை, மற்றும் கிணத்துக்கடவு ஆகிய 5 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை கொப்பரை கொள்முதல் நிலையங்களாக அரசு அறிவித்து தற்போது கொப்பரை கொள்முதலை  அதிகரிக்க 02-6-2022 முதல் தொண்டாமுத்தூர் மற்றும் அன்னூர் ஆகிய 2 நிறுவனங்களை புதியதாக கூடுதல் கொள்முதல் நிலையங்களாக அறிவித்துள்ளது இந்த கொள்முதலுக்கு பிப்ரவரி-2022 முதல் ஜூலை 2022 வரை கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இது நாள்வரை 1099-2 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது 
 இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், மற்றும் வங்கி கணக்கு ஆகிய விபரங்களுடன் தங்கள் அருகிலுள்ள மேற்கண்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாரை (பொள்ளாச்சி-70106 15376, - ஆனைமலை-99761 68113. கிணத்துக்கடவு -9865154644. அன்னூர்-88834 53333. தொண்டாமுத்தூர்-9994564540. செஞ்சேரி-9751527708. நெகமம்-9894687827) அணுகி பதிவு செய்து கொள்ளலாம் இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் தேங்காய் கொப்பரைக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளின் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்த கொப்பரை கொள்முதல் திட்டத்தில் தென்னை விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்