மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மாற்றுத்திறனாளி தம்பதியருக்கு
3 சென்ட் நிலம் தானம்  



பொள்ளாச்சி;-ஜுன்-15பொள்ளாச்சியில் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதியருக்கு அறக்கட்டளையின் சார்பில் 3 சென்ட் நிலம் தானமாக வழங்கப்பட்டது. 
பொள்ளாச்சி வடுகபாளையத்தில் சுந்தர அங்காளம்மன் சுவாமி பாரம்பாய நித்திய கைங்காய டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையினர் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில்
குள்ளிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த
மாற்றுத்திறனாளிகளான கருப்பசாமி, ராணி தம்பதியருக்கு வீட்டு மனை தானமாக வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு  சூலக்கல் அருகே உள்ள அன்புநகர் லே அவுட்டில் 3 செண்ட் அளவுள்ள மனையிடத்தை மேற்படி மாற்றுத்திறனாளிகளுக்கு டிரஸ்ட்டின் நிர்வாகி சுந்தரவள்ளி, மற்றும்
டிரஸ்டிகளான தங்கவேல், வினோத், ஸ்ரீ தேவி ஆகியோர் பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில்  பத்திரம் பதிவு செய்து வழங்கினர்.இடத்தை தானம் பெற்றுக்கொண்ட கருப்பசாமி, ராணி தம்பதியர் கூறுகையில், கண் பார்வை இரண்டும் தெரியாத நிலையில் நிலையான இருப்பிடமின்றி ஆதரவற்று வாழ்ந்து வந்த எங்களுக்கு மேற்படி டிரஸ்ட் மூலம் வீட்டுமனை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வீட்டு மனையானது எங்களுக்கு நிலையான இருப்பிடமாகவும், சமூகத்தில் தாழ்வு
மனப்பான்மையின்றி வாழவும் வழி வகுத்துள்ளது என தெரிவித்தனர். டிரஸ்ட் நிர்வாகி சுந்தரவள்ளி கூறுகையில் மாற்றுத் திறனாளி குடும்பத்திற்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம் டிரஸ்ட் மூலம் நிலம் தானமாக வழங்கியுள்ளோம் வீடு கட்டித்தர முடிவு செய்துள்ளோம் மேலும் இது போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் செய்ய தயாராக உள்ளோம் உதவி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள் இந்த 99521 22858 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.
                          நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்