மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை மாநகரில் 

ரூ. 290 கோடியில் இரண்டு பாலங்கள்

காணொளிக்காட்சி மூலம் முதல்வர் திறந்து வைப்பு


பொள்ளாச்சி;-ஜூன்-11 கோவை மாவட்டம்  இராமநாதபுரத்தில் ரூ. 230 கோடி மதிப்பீட்டில் மற்றும்
கவுண்டம்பாளையத்தில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் என மொத்தம் ரூ. 230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களை தமிழக முதல்வர்  காணொளி
காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் ரூ.230 கோடி
மதிப்பீட்டில் 3150மீ நீளம், 17.20 மீ அகலம் (நான்கு வழித்தடம்) மற்றும் 330மீ நீளம் என்ற அளவில் கோவை சுங்கம்
சந்திப்பிலிருந்து உக்கடம் செல்லும் சாலையில் கூடுதல் இறங்குதளம் அமைக்கப்பட்டு
ராமநாதபுரம் மற்றும் சுங்கம் முக்கிய சந்திப்புகளில்  மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும், கவுண்டம்பாளையம்
சந்திப்பில் ரூ.60 கோடி செலவில் 1175.40 மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள 4 வழித்தடம்,
மேட்டுப்பாளையம் சாலை மார்க்கம் 198 மீ அணுகுசாலையும், கோவை சாலை
மார்க்கம் 241 மீ நீளத்திற்கு அணுகுசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்விரண்டு மேம்பாலங்களையும் தமிழக முதல்வர்
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக
திறந்து வைத்ததைதொடர்ந்து, மின்சாரம் மதுவிலக்கு மற்றும்
ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இம்மேம்பாலங்களில்
வாகனப் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மேற்கு மண்டல
காவல்துறை தலைவர் சுதாகர்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், சண்முகசுந்தரம்,
சட்டமன்ற உறுப்பினர்கள்
அருண்குமார்,
அம்மன்.கே.அர்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ்,
வானதி ஸ்ரீனிவாசன், மாநகராட்சி ஆணையாளர் எம்.பிரதாப்,
மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு
பொறியாளர் சரவணன், கோட்டப்பொறியாளர் சமுத்திரக்கனி, உதவி
கோட்டப்பொறியாளர் முரளிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
                         நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்