மக்கள் வெளிச்சம் நாளிதழ்
வால்பாறை 108 வாகனத்திலேயே பிரசவம் பார்த்த ஓட்டுநர்
வால்பாறை;- ஜூன்-10 வால்பாறை முடீஸ் பகுதியில் எஸ்டேட் கூலித் தொழிலாளி சர்மா பீம் என்பவர் வேலை பார்த்து வருகிறார் இவரது மனைவி வர்மா பிரசவத்திற்காக வால்பாறை அரசு மருத்துவமனை சென்ற நிலையில் அங்கு 108 வாகனம் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 108 வாகனம் வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி வரும் வழியில் கவி அருவி அருகே வலியில் துடித்த பெண்ணுக்கு ஓட்டுநர் ராஜேந்திரன். பணியாளர் சக்தி (ஆஷா) ஆகியோர் 108 வாகனத்திலேயே பிரசவம் பார்த்தனர் வர்மா வுக்கு பெண்குழந்தை பிறந்தது. வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு மருத்துவர்கள், பணியாளர்ளை நியமித்து கர்ப்பிணி பெண்கள் வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வால்பாறை பகுதி மக்களின் கோரிக்கை
நிருபர் ஐயப்பன்
Comments
Post a Comment