மக்கள் வெளிச்சம் நாளிதழ்
வால்பாறையில் கரடி தாக்கி வடமாநில இளைஞர் படுகாயம்
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள மாணிக்கா என் சி எஸ்டேட்டில் கூலி தொழிலாளியாக. முத்தா. முறுமு (வயது21) தந்தையின் பெயர் சோனாலி முருமு இவர் வடமாநில ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து வால்பாறை மாணிக்கா என்.சி எஸ்டேட்டில் வேலை செய்து வருகிறார் மதியம் 12,10 மணி அளவில் எதிர்பாராமல் தேயிலை காட்டுக்குள் பதுங்கி இருந்த கரடி வாலிபரை கடித்து குதறியது ஆக்ரோசமாக தாக்கியதில் தலை கால் கை போன்ற இடங்களில் பலத்த காயங்களுடன் வாலிபர் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார் அருகிலிருந்த தொழிலாளர்கள் சத்தமிட்டு கரடியை விரட்டினர் பின்பு வாலிபரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்கு அனுப்பி வைத்தனர் பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து வால்பாறை காவல்துறை ஆய்வாளர் கற்பகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் வால்பாறை பகுதியில் மனிதர்களை வேட்டையாடி வரும் வன விலங்குகளின் தொல்லை அதிகரித்து வருவதினால் மக்களை பாதுகாப்பதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் வடமாநில இளைஞரை கரடி தாக்கிய சம்பவத்தார் வால்பாறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment