மக்கள் வெளிச்சம் நாளிதழ்

ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்தை கண்டித்து 

அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் 

பொள்ளாச்சி;- மே-30 ஒட்டன்சத்திரத்திற்கு  ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்.  
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு, கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார் அணையில் இருந்து குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு ரூ. 900 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கு விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆனைமலையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு, ஒன்றிய செயலாளர்களான சுந்தரம், கார்த்திக் அப்புசாமி, ஆனைமலை ஒன்றியக்குழு தலைவர் சாந்தி கார்த்திக், நகர செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஆழியார் அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். 
வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி கூறியதாவது,  
ஆழியார் அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு சுமார் ரூ. 900 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கும். மேலும் பொள்ளாச்சி, உடுமலை, குடிமங்கலம், கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை உருவாகும். ஆகவே ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்திற்கு ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் எடுக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இத்திட்டத்தை எதிர்த்து  தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் அ.தி.மு.க. வினர்  பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
                            நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்