மக்கள் வெளிச்சம் நாளிதழ்

அனுமதியின்றி மரங்களை வெட்டியதாக

இலை, தழைகளை கட்டிக்கொண்டு
மனு கொடுத்த சமூக ஆர்வலர்  


பொள்ளாச்சி;-மே-09
அரசு மருத்துவமனையில் முறைகேடாக  மரங்களை வெட்டியவர்கள் மீது   நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலை, தழைகளை கட்டிக்கொண்டு வந்த  சமூக ஆர்வலர்  சார் ஆட்சியரிடம் மனு கொடுத்தார். 
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன் புதூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காந்தி பூபதி என்பவர் உடல்முழுக்க இலை, தழைகளை கட்டிக்கொண்டு வந்து   சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், ஆனமலை தாலுகாவிற்கு உட்பட்ட வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பலவகை மரங்கள் ஏராளமாக இருந்தன. இதில் 18 மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டன. இந்த மருத்துவமனையில் மருத்துவ குணம் கொண்ட மூலிகை வகையைச் சார்ந்த மரங்கள் நூறு ஆண்டுகள் வயதான மரங்களாகும். அதில் ஓரிரு மரங்களில் வந்து அமரும்  ஏராளமான பறவைகளின் எச்சத்தால் துர்நாற்றமும், சுகாதார கேடும் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதற்கென குறிப்பிட்ட சில மரங்களின் கிளைகளை மட்டும் வெட்ட வருவாய்த் துறையினர் அனுமதி அளித்தனர். ஆனால் அனுமதிக்கு மாறாக ஏராளமான மரங்களை அடியோடு வெட்டி தள்ளியுள்ளனர். இது குறித்து வருவாய்த் துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே அரசு மருத்துவமனை வளாகத்தில் முறைகேடாக மரங்களை வெட்டியவர்கள், இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்த வருவாய்த்துறையினர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
                       நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்