மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோழியை பிடிக்க வந்து 
கூண்டில் சிக்கிய 
சிறுத்தை பலி



பொள்ளாச்சி;-மே-12 வால்பாறையில் இரவு நேரத்தில் கோழியை பிடிக்க வந்து கூண்டில் சிக்கிய சிறுத்தை பரிதாபமாக இறந்தது. 
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டம் வால்பாறை
வனச்சரகத்திற்குட்பட்ட பழைய வால்பாறை வரட்டுப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான். இவரது வீட்டிற்கு பின்புறம் கோழிகளை அடைத்து வைப்பதற்காக பெரிய கூண்டு ஒன்றும் உள்ளது. இதில் அதிகாலையில் ஆண் சிறுத்தை ஒன்று
முன்பகுதி இடது கால் நகங்கள் கூண்டில்  மாட்டிய நிலையில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தேசிய புலிகள் பாதுகாப்பு
ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, வால்பாறை வனச்சரக அலுவலரால் சிறுத்தை
இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனக்கால்நடை மருத்துவர் உடற்கூறு ஆய்வும் செய்யப்பட்டது. மர்மமான முறையில் சிறுத்தை இறந்தது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
                          நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்