மக்கள் வெளிச்சம் நாளிதழ்

தாழ்த்தப்பட்டோர் பள்ளி செல்லக்கூடாதா
மாணவர்களுடன் வந்து பெற்றோர் புகார்



பொள்ளாச்சி;-மே-09
ஜாதி பெயரை சொல்லி திட்டுவதாக அரசு பள்ளி மாணவர்களுடன் வந்து பெற்றோர் சார் ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர். 
பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்திற்கு ஏராளமான பள்ளி சிறுவர்கள் பெற்றோருடன் வந்திருந்தனர். சப் கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவை சந்தித்த பெற்றோர் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், பொள்ளாச்சி  நல்ஊத்துகுளியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இதில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த  எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது,  ஊரிலுள்ள சில  நபர்கள், ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டுவது, கற்களை எறிந்து காயப்படுத்துவது என பல்வேறு தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு  பாதுகாப்பும் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.   இது சம்பந்தமாக பள்ளி ஆசிரியர் மற்றும் வருவாய்த் துறையினரிடம் முறையிட்டபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே சப்-கலெக்டர் இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தவேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
                        நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்