மக்கள் வெளிச்சம் நாளிதழ்
விடுமுறை நாளில் விற்பனைக்காக
வீட்டில் பதுக்கி வைத்திருந்த
ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான மது பறிமுதல்
தாய் கைது - மகன் தலைமறைவு
பொள்ளாச்சி;-மே-01 அரசு தடையை மீறி விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ ஒரு லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மே 1 உழைப்பளார் தினமான நேற்று மது
விற்பனைக்கு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்திருந்தது. இதன் காரணமாக யாரேனும் மது ரகசியமாக பதுக்கி வைத்திருக்கிறார்களா என்பதை மதுவிலக்கு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இதில் கோவை மாவட்டம் பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு
எல்லைக்குட்பட்ட இடங்களில் மதுவிற்பனையைத்
தடுக்க வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் காவல் துணை
கண்காணிப்பாளர்
செல்வராஜ் மேற்பார்வையில்
பேரூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அமுதா
தலைமையில் தலைமை காவலர்கள் விஜயகிரி, முருகன், ஹைதர்அலி, சீதாராமன் மற்றும் கோபிநாத்
ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அப்போது பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம் கந்தசாமிக் கவுண்டர் வீதியில் சரோஜினி
என்பவரது வீட்டில் அரசு மதுபான பாட்டில்களை டாஸ்மாக்
கடையிலிருந்து வாங்கி பதுக்கி வைத்து, அரசு மதுபான கடைகள்
மூடிய பிறகு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாக தெரியவந்து. தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் ஒரு லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள ஆயிரத்து 222
குவாட்டர் பாட்டில்கள், 24 பீர் பாட்டில்கள் மற்றும் மது விற்பனைக்கு பயன்படுத்திய கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். மது விற்பனையில் ஈடுபட்ட சரோஜினி என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். தப்பி ஓடிய சரோஜினியின் மகன்
திருமலைசாமி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிறப்பாக செயல் புரிந்த தனிப்படையினரை கோவை மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டினார்.
நிருபர் ஜெகன்
Comments
Post a Comment