மக்கள் வெளிச்சம் நாளிதழ்
தமிழக முதல்வர் மு.க,ஸ்டாலின் நாளை கோவை வருகை
பொருநை அகழ்வராய்ச்சி கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிருகிறார்
கோவை வ.உ.சி மைதானத்தில் நாளை பொருநை அகழ்வராய்ச்சி கண்காட்சி மற்றும் ஓராண்டு சாதனைகள் ஓவியக் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிடுகிறார் இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள்,மேயர்,நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சி குறித்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் இ,ஆ.ப இக்கண்காட்சியில் தொல்லியல் துறை சார்பில் "கீழடி" (வைகை நதிக்கரையில் நகர நாகரிகம்) "பொருநை" (ஆற்றங்கரை நாகரிகம்) "கொடுமணல்" (சங்ககாலத் தொழிற்கூடம்) "மயிலாடும்பாறை" (4200 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலப்பண்பாடு) ஆகிய தொல்பொருட்கள் கண்காட்சியும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சியும் 10.000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது இக்கண்காட்சி இன்று துவங்கும் இக்கண்காட்சி வருகின்ற (25-05-2022) அன்று வரை 7 நாட்கள் தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் மேலும் தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொண்ட அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் உள்ள நெல்மணிகளின் காலம் கிமு 1155 என கண்டறியப்பட்டது மேலும் "தண் பொருநை" என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல் ஆய்வுகள் தெரிவித்தாகவும் உள்ளது எனவை தொன்மையான சமூகத்தின் நாகரிகத்தினை பறை சாற்றும்அகழ்வராய்ச்சி கண்டெடுப்புகளை காண பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு பயன் பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment