மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை மாநகரில்
ஆந்தைகள் வசிக்க செயற்கை கூடு


பொள்ளாச்சி;-மே-28 பல்லுயிர்கள் பாதுகாப்பின் ஒரு பகுதியாக கோவை மாநகர் முழுவதும் 200 இடங்களில் ஆந்தைகள் வசிக்க செயற்கை கூடு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.   பல்லுயிர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அழிந்து
வரும் அவற்றை பாதுகாப்பதின் நோக்கம் பற்றிய விழிப்புணர்வு
ஏற்படுத்தவும் உலக பல்லுயிர்கள் தினமானது நாடு முழுவதும்
கொண்டாடப்பட்டு வருகின்றது. இயற்கையை சமநிலையில் வைத்திருப்பதில்
பல்லுயிர்களானது பெரும் பங்கு வகிக்கின்றது. பல்லுயிர்களில் ஒரு வகை உயிரினத்தின்
அழிவு கூட காலப்போக்கில் இயற்கை சமநிலையில் பெரும் எதிர்மறையான மாற்றத்தை
ஏற்படுத்தும். அதில் நகர்புற பல்லுயிர்கள் கேட்பாரற்ற நிலையில் உள்ளது.
நகரமயமாதலின் ஒரு பகுதியாக கான்க்ரீட் கட்டிடங்கள் அதிகரித்து வருவதால்
நகர்புறத்தில் பல்லுயிர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டன. எனவே
அவற்றை பேணி பாதுகாப்பதும் அவை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில்
ஏற்படுத்தவும் கோவையில்  சிங்காநல்லூர் குளக்கரையில் வைத்து உலக பல்லுயிர்கள் தினம்
கொண்டாடப்பட்டது.
நகரின் மத்தியில் அமைந்திருந்த போதும் இக்குளம்
பல லட்சக்கணக்கான பல்லுயிர்களின் வாழ்விடமாக திகழ்ந்து உணவு சங்கிலியில்
எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் சீராக வைத்துள்ளது. 
அதன்படி சிங்காநல்லூர் குளத்தில் வைத்து உலக பல்லுயிர்கள் தினமானது
மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வன மரபியல் மற்றும்
மரம் வளர்ப்பு நிறுவனத்தின் இயக்குனர் குஞ்சிகண்ணன், மாவட்ட வன
அலுவலர் அசோக் குமார், சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு
மையத்தின் விஞ்ஞானி பாபு மற்றும் நகர்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மற்றும்
கல்வி மையத்தின் உறுப்பினர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
மாணவ, மாணவியருக்கும் பொது மக்களுக்கும் சிங்காநல்லூர்
குளக்கரையில் உள்ள மருத்துவகுணமுள்ள தாவரங்கள் பற்றி உலக வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தின் இயக்குனர் குஞ்சிகண்ணன் விளக்கினார்.
அதன் பின்பு அதிகரித்து வரும் நகர மயமாதலினால் கான்க்ரீட் கட்டிடங்கள்
பெருகி வருவதால், நமது உணவு சங்கிலியில் பெரும் பங்கு வகிக்கும் ஆந்தை இனங்கள்
தற்போது கூடு கட்டி இனப்பெருக்கம் செய்ய இடம் இல்லாத சூழ்நிலையில் உள்ளன. இந்த
ஆந்தை இனங்களுக்கான செயற்கை கூடானது அமைக்கும் நிகழ்வானது மாவட்ட ஆட்சியரால் துவக்கி வைக்கப்பட்டது. எலி போன்ற விலங்குகளை கட்டுப்படுத்தி
உணவு சங்கிலியை சமநிலையில் வைத்து நமக்கு உதவக்கூடிய ஆந்தைகளுக்கு
செயற்கையான கூடானது அமைத்துக் கொடுத்து அவற்றை பாதுகாக்கும் நோக்கில்
கோவை மாநகர் முழுவதும் வரும் நான்கு மாதங்களுக்குள் 200 கூடுகள் அமைக்கவும்
திட்டமிடப்பட்டுள்ளது.
                        நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்