மக்கள் வெளிச்சம் நாளிதழ்

விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு

கோவில் நிலங்களை மீட்டு வழங்க
அம்பேத்கர் மக்கள் இயக்கம் கோரிக்கை 


பொள்ளாச்சி;-மே-23
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான
பயன்பாடற்று கிடக்கும்
நிலங்களை மீட்டு
விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என அம்பேத்கர் மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஆவல் காளிமுத்து தலைமையில், மாவட்ட இளைஞரணி செயலாளர் தம்பு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணியரசு உள்ளிட்டோர் பொள்ளாச்சி சப் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். மனுவில்,
பொள்ளாச்சி ஆவலப்பம்பட்டி கிராமத்தில் பலர் தொன்று தொட்டு விவசாய கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து குடும்பம் நடத்திவருகிறார்கள்.
இவர்கள் தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) சமூகத்தைச் சார்ந்தவர்கள்.
ஆவலப்பம்பட்டி வருவாய் கிராமத்திற்குட்பட்ட மூலனூர் கிராமத்தில்
13 எக்டர் நிலமும், அதே பகுதியில் 6 எக்டர்
பூமியும் பயன்பாடு இல்லாமல் தரிசாக உள்ளது.
எனவே எங்களைப்போன்ற விவசாயக்கூலி தொழிலாளர்களுக்கு இந்த நிலத்தை 
பிரித்து கொடுத்தால் அரசு விதிக்கும் குத்தகை செலுத்தி விவசாயம்
செய்து எங்கள் ஏழ்மையை போக்கவும், மேம்பாடு அடையவும் ஏதுவாக
இருக்கும். ஆகவே மேற்கண்ட நிலங்களை இந்து சமய
அறநிலையத்துறையின் மூலம் கண்டறிந்து எங்களுக்கு நிலங்களை
பிரித்து தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
                           நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்