மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கலைஞர் கிராம
வளர்ச்சித் திட்டத்தில்
விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த கலைஞரின் அனைத்து கிராம
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டம், சர்க்கார்சாமக்குளம் வட்டாரம்
கொண்டையம்பாளையத்தில் உள்ள ஆசியன் பொறியியல் கல்லூரி வளாகத்தில்
மாவட்ட ஆட்சியர் சமீரன், நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன்
ஆகியோர் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் நலத்திட்ட
உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர்
சித்ராதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா,
திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) சந்திரா, மாவட்ட ஆட்சியரின்
நேர்முக
உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி,
(தோட்டக்கலைத்துறை) புவனேஷ்வரி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல
இணை இயக்குநர் பெருமாள்சாமி, கொண்டையம்பாளையம் ஊராட்சி மன்ற
தலைவர் கோவிந்தராஜ், அட்மா தலைவர்(வெள்ளமடை) சுரேஷ்குமார்
மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் விவசாயிகள் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக
ஏழு அம்ச தொலைநோக்குத் திட்டங்களை வகுத்துள்ளார். இந்த ஏழு அம்ச
தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்றான மகசூல் பெருக்கம் மகிழும்
விவசாயி என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில், கலைஞரின் அனைத்துக்
கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டது.
ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும் தன்னிறைவான கிராமத்தையும்
உருவாக்குவது இந்தத் திட்டத்தினுடைய முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்
திட்டமானது, தமிழ்நாட்டிலுள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளில்
செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டமானது ஊரக வளர்ச்சித் துறையின்
மாபெரும் திட்டமான, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட
கிராமங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதால், கிராம அளவில்
ஒருங்கிணைந்து செயல்படமுடியும் என்பது இதனுடைய சிறப்பம்சமாகும்.
2021-22ம் ஆண்டில் 1,997 கிராம பஞ்சாயத்துகளில் ரூ.227 கோடியில்
இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தினுடைய முக்கிய சிறப்பம்சம்
கிராம அளவில் அரசுத் துறைகளின் அனைத்து நலத்திட்டங்களையும்
ஒருங்கிணைத்து செயல்படுத்துவதாகும்.
கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களைச் சாகுபடிக்கு கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களைப் பெருக்கி, சூரிய சக்தி பம்ப் செட்டுகளுடன் நுண்ணீர்ப் பாசன வசதி ஏற்படுத்துதல், வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி
சந்தைப்படுத்துதல், ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக பண்ணைக் குட்டை அமைத்தல் மற்றும் கிராம வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்,
கால்நடைகளின் நலன் காத்து, பால் உற்பத்தியைப் பெருக்குதல்,
வருவாய்த்துறையின் மூலம் பட்டா மாறுதல், இ-அடங்கல், சிறு, குறு
உழவர்களுக்கு சான்று வழங்குதல், கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் அதிக அளவு பயிர்க்கடன்கள் வழங்குதல், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாருதல்
உள்ளிட்ட கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்காக அனைத்துத் துறை திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தபடவுள்ளது.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையுடன் ஒருங்கிணைந்து
திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதால், கிராம அளவில் இத்திட்டம் அனைத்து
விவசாயிகளை சென்றடைவதுடன், வேளாண்மை செய்யும் திறன்
மேம்படுத்தப்படும். இதனால் கிராமப்புற பொருளாதாரம் மேம்படும். கோவை
மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 4 விவசாயிகளுக்கு தலா ரூ.150 மானியத்தில் தென்னங்கன்றுகளையும், 5 விவசாயிகளுக்கு தலா ரூ.2000 மானியத்தில் பேட்டரி தெளிப்பான்
கருவிகளையும், 5 விவசாயிகளுக்கு தலா ரூ.334 மானியத்தில்
5 கிலோ துவரை விதைகளையும், படித்த வேளாண்மை பட்டதாரி பயனாளிக்கு
அக்ரி கிளினிக் அமைப்பதற்காக ரூ. ஒரு இலட்சம் மதிப்பில் உதவித்தொகையும்
வழங்கப்பட்டது.
5 விவசாயிகளுக்கு
கருவிகளையும்,
கைத்தெளிப்பான்
மேலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில், இரண்டு பயனாளிகளுக்கு
தலா ரூ.5000 மானியத்தில் பயிர் ஊக்கத் தொகைகளையும், 4 விவசாயிகளுக்கு
தலா ரூ.100 மதிப்பில் பழக்கன்றுகளையும், 4 விவசாயிகளுக்கு ரூ.45 மதிப்பில் பராம்பரிய காய்கறி விதைகளையும், 6 விவசாயிகளுக்கு தலா ரூ.1000 மதிப்பில்
உபகரணங்களையும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின்
சாாபில் இரண்டு விவசாயிகளுக்கு உழவர் சந்தை அடையாள அட்டைகளையும்,
ஒரு விவசாயிக்கு அக்மார்க் ஆய்வக உரிமத்தினை மாவட்ட ஆட்சியர் சமீரன், நாடாளுமன்ற
உறுப்பினர் நடராஜன் ஆகியோர் வழங்கினர்.
நிருபர் ஜெகன்
Comments
Post a Comment