மக்கள் வெளிச்சம் நாளிதழ்
தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி
சார்பில்
திராவிட மாடல் - பயிலரங்கம்
பொள்ளாச்சி;-மே-29 தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பொள்ளாச்சியில் திராவிட மாடல் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது.
கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், பொள்ளாச்சி
வெங்கடேசா காலனி
யில் உள்ள மண்டபம் ஒன்றில் திராவிட மாடல் என்ற தலைப்பில் பயிலரங்கம்
நடைபெற்றது.
மாவட்ட துணை ஒருங்
கிணைப்பாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிலரங்கிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன்,
துணை அமைப்பாளர்கள்
சிவானந்தம்,
சீனிவாசன், பிரபுராஜ்
ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
இலங்கை
தமிழர் நலன் ஆலோசனைக் குழு உறுப்பினர் லெனின்,
செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, திராவிட இயக்க தமிழ் பேரவையின் அமைப்பு செயலாளர்
நாகராஜன் ஆகியோர்
கலந்து கொண்டு, திராவிட மாடல்
ஆட்சியின் ஓராண்டு சாதனைகள் குறித்து பேசினர்.
இதில் இலங்கை
தமிழர் நலன் ஆலோசனைக் குழு உறுப்பினர் லெனின் பேசுகையில், 1925ல் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கப்பட்ட அதே ஆண்டில்தான் தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.
தந்தை பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடினார். பிறகு அறிஞர் அண்ணா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, இன்று தமிழகத்தை ஆளும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வரை இருப்பது தான் திராவிட மடல் ஆட்சி. தமிழகத்தில் காலூன்ற ஆர்.எஸ்.எஸ். பல வழிகளிலும் முயற்சிக்கிறது. ஆனால் தி.மு.க. அது நடக்காது. தமிழகத்தில் தற்போது படித்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு விதையை விதைத்தவர் தந்தை பெரியார்.
அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய பாகுபலி. தி.மு.க. வின் கொள்கைகளும், ஒவ்வொரு திட்டங்களும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கானது என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை கூற முடியும். எனவேதான் திராவிட மாடல் ஆட்சி என்று உரக்கச் சொல்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில்,
முன்னாள் மாவட்ட
பொறுப்பாளர் தென்றல்
செல்வராஜ், முன்னாள்
எம்.எல்.ஏ. சந்திரசேகர்,
நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், துணைத்தலைவர் கௌதமன், தலைமை பொதுக்குழு
உறுப்பினர் அமுதபாரதி, செயற்குழு உறுப்பினர் மு.க. முத்து, நகராட்சி கவுன்சிலர்கள்
நாச்சிமுத்து, துரைபாய், பாத்திமா, டேஸ்டி பாலு, விஜயா காயத்திரி, நிலாபர் நிஷா, இந்திரா கிரி, மணிமாலா, சண்முக
பிரியா, சார்பு
அணி நிர்வாகிகள் கோ.சி. மணிகண்டன், நவநீதகிருஷ்ணன், ஜெயக்குமார்,
சதீஸ், பைக்பாபு உட்பட
பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் ஜெகன்
Comments
Post a Comment