மக்கள் வெளிச்சம் நாளிதழ்

ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்திற்கு

ஆழியாரில் இருந்து தண்ணீர் எடுக்க  ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் 

எம்.எல்.ஏ. ஜெயராமன் திட்டவட்டம் 



பொள்ளாச்சி;-மே-27 ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்திற்காக ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என பொள்ளாச்சி எம்.எல்.ஏ. ஜெயராமன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. பல்வேறு  கோரிக்கைள் தொடர்பாக மனு கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்து இருந்தனர். அப்போது அங்கு வந்த பொள்ளாச்சியில் ஜெயராமன் மக்களிடம் குறைகளை கேட்தோடு, அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணும்படி சார் ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கச்சத்தீவை மீட்போம் என தமிழக முதல்வர் கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது. தி.மு.க. ஆட்சியிள்போது தான் பிரதமர் இந்திரா காந்தி கச்சத்தீவை தாரை வார்த்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதற்காக உச்சநீதிமன்றம் வரை சட்டப் போராட்டம் நடத்தினார். அந்த  வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
ஆழியார் அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு ரூ. 900 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கும். மேலும் பொள்ளாச்சி, உடுமலை, குடிமங்கலம், கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சத்துக்கும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை உருவாகும். ஆகவே ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்திற்கு ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் எடுக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
                         நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்