மக்கள் வெளிச்சம் நாளிதழ்

இன்ஸ்பெக்டர் கற்பகம் அதிரடி நடவடிக்கை 3.1/2.கிலோ கஞ்சா பறிமுதல்  


வால்பாறை;-மே-27 வால்பாறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் அதிரடி  நடவடிக்கையில் காவல் ஆய்வாளர் கற்பகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். வால்பாறை  காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்   வால்பாறையில் உள்ள காமராஜ் பகுதியில் காவல் ஆய்வாளர் கறபகம் தலைமையில் உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவல் துறையினர் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். தாஸ் (எ) மரியதாஸ்  என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 3.1/2. கிலோ கஞ்சாவை கைப்பற்றி காவல் நிலையம் அழைத்து வந்து தாஸ் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.காவல் ஆய்வாளர் கற்பகம் வால்பாறை பகுதியில் பொறுப்பேற்று 10 மாதங்களே ஆன நிலையில் இதுவரை 14-வழக்குகளை பதிவு செய்துள்ள காவல் ஆய்வாளர் கற்பகத்தை பொதுமக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள்  பாராட்டி வருகின்றனர்.
தனது நடவடிக்கை தொடரும் என காவல் ஆய்வாளர் கற்பகம் தெரிவித்தார்.
                        நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்