மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை வெள்ளிங்கிரி மலையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு 



கோவை;-22 கோவை மாவட்டம் பூண்டி வெள்ளிங்கிரி அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவிலில் மலைப்பாதை அமைக்கும் பணிகளை சாத்தியக் கூறுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். கடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கையில் 2022-2023 ஆம் ஆண்டு அறிவிப்பின் படி மலைக்கோவில்களில் மலைப்பாதை அமைக்கும் திட்டத்தில் உள்ள திருக்கோவில்கள் இயற்கையே இறைவனாக உள்ள திருவண்ணாமலை மாவட்டம் பருவதமலை அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோவில், போளூர் அருள்மிகு இலட்சுமி நரசிம்மர் கோவில், கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில், மதுரை மாவட்டம் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவில், தேனி மாவட்டம் அருள்மிகு கண்ணகி திருக்கோவில் ஆகிய ஐந்து கோவில்களுக்கு மலைப்பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் படி முதற்கட்டமாக கோவை மாவட்டம் பூண்டி வட்டம் வெள்ளியங்கிரி அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவிலில் அதிக அளவில் மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர் இந்தியா முழுவதும் உள்ள சிவனடியார்கள் பக்தர்கள் பல்வேறு காலகட்டங்களில் தரிசனம் செய்து வருகிறார்கள் ஒவ்வொரு ஆண்டுக்கு கூட்டம் அதிகமாக வருவதால் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் மலைப்பாதை அமைக்க வலியுறுத்தி உள்ளார்கள் அந்த அறிவிப்பின்படி மலைப்பாதை அமைப்பதற்கு விரைவில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு மலைப்பாதை அமைக்கும் பணிக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ரூபாய் 1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப, கூடுதல் ஆணையர் கண்ணன் இ.ஆ.ப உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்