மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கொப்பரை கொள்முதலை
அரசு உடனே துவங்க வேண்டும்
எம்.எல்.ஏ. கோரிக்கை
பொள்ளாச்சி;-மே-16விவசாயிகளிடமிருந்து கொப்பறைகளை அரசு உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என பொள்ளாச்சி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
பொள்ளாச்சி எம்.எல்.ஏ. ஜெயராமன் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில், அன்புடையீர்,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில்
தென்னை விவசாயமே பிரதானமாக உள்ளது.
தேங்காய் விலை மிகவும் குறைந்து விடக்கூடாது என்பதற்காக கடந்த ஆட்சியில்
மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார
விலையை கிலோ ஒன்றுக்கு ரூ.105.90 என நிர்ணயம் செய்து
கூட்டுறவு சங்கங்கள்
மூலமாக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் கடந்த 10
ஆண்டுகளாக தேங்காய் ஒன்றுக்கு
ரூ.20க்கு குறையாமல் பாதுகாத்து வந்தோம். ஆனால் தற்போது தேங்காய் விலை
மிகவும் குறைந்ததன் காரணமாக தென்னை விவசாயம் செய்யும் குடும்பங்கள் மிகவும் சிரமமான சூழ்நிலையில் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு
உடனடியாக அரசு கொப்பரை
கொள்முதலை தொடங்கி தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். மேலும், நெல்லுக்கு மானியம் தருவது போல் தேங்காய்க்கும் கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 10 மானியம் அளிக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு ஆழியாறு அணையிலிருந்து
ரூ.930 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிய
வருகிறது.
ஏற்கனவே திண்டுக்கல் வரை காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு
வருகிறது. எனவே ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு காவிரி கூட்டுக் குடிநீர்
திட்டத்தை செயல்படுத்தாமல் ஆழியாறு அணையிலிருந்து குடிநீர் திட்டத்தை
செயல்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை.
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு அருகில் பாலாறு, பொருந்தலாறு, வரதமாநதி ஆகியவை உள்ளது. ஆனால் 123 கி.மீ தொலைவில் இருக்கும் ஆழியாறு
அணையில் இருந்து குடிநீர் கொண்டு செல்வது பொள்ளாச்சி ஆனைமலை வட்டார மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரம்
பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல ஆட்சேபணை தெரிவிக்கிறோம்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும்
பொருட்டு எந்த சூழ்நிலையிலும் ஆழியாறு அணையிலிருந்து வேறு எந்த
திட்டங்களுக்கோ அல்லது வெளி மாவட்டங்களுக்கோ தண்ணீர் எடுத்து
செல்வதற்கு நிச்சயம் அனுமதிக்க கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிருபர் ஜெகன்
Comments
Post a Comment