மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் கல்லூரி மாணவர் உள்பட இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.
பொள்ளாச்சி;-மே-02 பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு கோவையிலிருந்து நண்பர்கள் சுற்றுலா வந்திருந்தனர் ஆழியார் பூங்கா குரங்கு அருவி பகுதிகளை சுற்றி பார்த்தவர்கள் ஆழியார் அணையில் குளிக்க இறங்கியுள்ளனர் அப்போது கோவை கணபதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஸ்ரீராமர் தண்ணீரில் மூழ்கி உள்ளார் அவரை காப்பாற்ற அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் நவீன் குமார் முயற்சி செய்து உள்ளார் இதில் ஆழமான பகுதிக்கு சென்ற இருவர் சேற்றில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளனர் உடன் வந்தவர்கள் காப்பாற்றக் கோரி கூச்சல் எழுப்பவே அருகில் இருப்பவர்கள் செல்வதற்குள் தண்ணீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர் இதனை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி இருவரது உடல்களையும் மீட்டு கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து ஆழியார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நிருபர் ஜெகன்
Comments
Post a Comment