மக்கள் வெளிச்சம் நாளிதழ்

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு

அரசு மருத்துவமனையில் மரக்கன்று நடும் விழா


பொள்ளாச்சி;-மே-12உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
உலக செவிலியர் தினம் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இருப்பிட தலைமை மருத்துவர் சரவண பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் பேரவையின் தலைவர் வெள்ளை நடராஜ் ஏராளமான மரக்கன்றுகளை இலவசமாக  வழங்கினார். அவற்றை தலைமை செவிலியர்கள் ராமாத்தாள், சித்ரா, உமா மகேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, ரத்த வங்கி செவிலியர் தனலட்சுமி ஆகியோர் மருத்துவமனை வளாகத்தில் நட்டனர்.
நகராட்சி கவுன்சிலர் சாந்தலிங்க குமார் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செவிலியர்களுக்கு இனிப்புகளை வழங்கி பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் நோயாளிகள் நலச்சங்க உறுப்பினரான மண்ணூர் ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
                         நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்