மக்கள் வெளிச்சம் நாளிதழ்

தொழிலாளர் தினம் பொள்ளாச்சியில் கோலாகலம்



பொள்ளாச்சி;-மே-01 பொள்ளாச்சியில்  தொழிலாளர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மே 1ம் தேதி உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொழிலாளர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகர்நல அலுவலர் ராம்குமார் முன்னிலை வகித்தார். நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் என 300க்கும் மேற்பட்ட தூய்மைப்  பணியாளர்களுக்கு நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் காலை சிற்றுண்டியை வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழக முதல்வர் திராவிட மாடல் ஆட்சியை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார். அவரின் வழிகாட்டுதலின்படி மக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்க பல்வேறு இன்னல்களுக்கு இடையே அயராமல் பாடுபடும் தூய்மைப் பணியாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக தொழிலாளர் தினத்தன்று அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி  கவுன்சிலர்கள் பாத்திமா, உமா மகேஸ்வரி, துரை பாய், ஆஜி என்கிற இளமாறன், கந்த மனோகரி, தங்கவேல், சண்முகப்பிரியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி நகர மற்றும் தாலுகா திராவிட ஆட்டோ ஓட்டுநர் முன்னேற்ற சங்கம் சார்பில்  அலுவலக திறப்பு விழா மற்றும் மே தின பேரணி நடைபெற்றது.
காந்தி மண்டபம் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தை நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் செந்தில்குமார், பொதுச்செயலாளர் அமீர், செயலாளர் நடராஜ், பொருளாளர் முத்துக்குமார், துணைத்தலைவர்கள் சிவகுமார், வினோத்குமார், துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், மோகன்ராஜ், தி.மு.க. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் தர்மராஜ், நகராட்சி கவுன்சிலர் தங்கவேல், இலக்கிய அணி மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் துவங்கிய மே தின ஆட்டோ பேரணியை நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் அணிவகுத்து கோவை ரோடு, காந்தி சிலை, பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம் வரை சென்று மீண்டும் பேருந்து நிலையம், நியூ ஸ்கீம் ரோடு, பல்லடம் ரோடு, வழியாக தேர் நிலையில் பேரணி நிறைவுபெற்றது.
                        நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்