மக்கள் வெளிச்சம் நாளிதழ்
நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு
எம்.எல்.ஏ. நிதியில்
தளவாட சாமான்கள்
பொள்ளாச்சி;-ஏப்-30 பொள்ளாச்சி நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு எம்.எல்.ஏ. நிதியிலிருந்து ரூ. 9 லட்சம் மதிப்பிலான தளவாட சாமான்கள் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணா நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் பெஞ்ச், டெஸ்க் வசதி இல்லாததால் மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்து வந்தனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி எம்.எல்.ஏ. ஜெயராமன் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இப்பள்ளியின் தளவாட சாமான்களுக்கென ரூ. 9 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இந்த நிதியிலிருந்து 84 டெஸ்க், பெஞ்சுகள், 15 பீரோக்கள், 10 ரேக்குகள் ஆகிய பொருட்கள் வாங்கப்பட்டன. அவற்றை பள்ளிக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. ஜெயராமன் கலந்து கொண்டு தளவாட பொருட்களை பள்ளிக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நகராட்சி பள்ளியில் இவ்வளவு மாணவர்கள் படிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இப்பள்ளிக்கு தேவையான கூடுதல் கட்டிடங்கள் கட்டுவது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து செய்து கொடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் கௌதம், நகராட்சி திமுக கவுன்சிலர்களான பெருமாள், சண்முகப்பிரியா, வைஷ்ணவி, முன்னாள் நகராட்சித் தலைவர் கிருஷ்ணகுமார், அ.தி.மு.க. நகராட்சி கவுன்சிலர் ஜேம்ஸ் ராஜா, முன்னாள் கவுன்சிலர்களான மகேஸ்வரி, ஐயப்பன், முரளி, நீலகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் ஜெகன்
Comments
Post a Comment