மக்கள் வெளிச்சம் நாளிதழ்

முன் களப்பணியாளர்களுக்கு 
மருத்துவ பரிசோதனை





பொள்ளாச்சி, ஏப். 24 - வனத் துறையில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி கோட்டத்தில் பணியாற்றும் முன் களப்பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.    
அட்டகட்டியில் உள்ள வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்ற இம்முகாமில் கோவை  பி.எஸ்.ஜி.
மருத்துவமனையின் டாக்டர்கள் டால்ஸ்ட்ராய்,
ராமகிருஷ்ணன், நஸ்ரின், மீனாஜான்,
காவ்யா, கிரண்,  செவிலியர்கள் சஜித், லிபின்,
மருத்துவ ஆலோசகர்.கீதா, உதவியாளர். தனபாக்கியம், சேகர் ஆகிய மருத்துவ வல்லுநர்கள் குழுவால் முன்களப்பணியாளர்களுக்கு
மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனை மற்றும் மருத்துவ
அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், டாக்டர். டால்ஸட்ராய் மருத்துவ
முதலுதவி, பாம்புக்கடி மற்றும் பயனுள்ள சிறு, சிறு மருத்துவ குறிப்புகள் தொடர்பாக  பவர்பாயிண்ட்
மூலம் பணியாளர்களுக்கு விளக்கி கூறினார்.
                          நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்